நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன்பு ஏராளமானோர் யாசகம் எடுத்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாசகம் செய்யும் நபரின் பேக்கை பேராலய ஊழியர் ஒருவர் சோதனை செய்த போது அதில் ஏராளமான மதுபாட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இந்த வீடியோ
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யாசகம் எடுக்கிறோம் என்ற போர்வையில் வேளாங்கண்ணிக்கு வருவோருக்கு மறைமுகமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கள்ளத்தனமாக சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் இது போன்ற யாசகம் எடுப்போர் மீது வேளாங்கண்ணி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.