நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி நிலுவையில் உள்ளவர்களிடம் உடனடியாக வாடகை தொகையை கட்ட வேண்டும் என்று வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில் இதனையும் மீறி வாடகை பாக்கி கட்டாத மளிகை கடை, காய்கறிகடை, உணவகம் உள்ளிட்ட 16 கடைகளை வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
