தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் நீடித்த நிலையான வேளாண்மைக்கு நெகிழி பயன்பாடு இல்லாத மண்வள பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பது பொது மக்களிடையே வலியுறுத்தப் பட்டது.