தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் காய்கறி பயிர்களில் தோன்றும் பூச்சி நோய்களை உயிரியல் காரணிகளை கொண்டு கட்டுப்படுத்தும் முறைகள், செலவில்லாமல் தயாரிக்கப்படும் அமிர்த கரைசல், அக்னி அஸ்திரா போன்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், பயன் படுத்தும் முறைகள் ஆகியவை விரிவாக எடுத்துக் கூறப்பட்டன. இதில் பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா பேசும் போது காய்கறி விவசாயிகள் அதிக நஞ்சு தெளிக்காமல் காய்கறி சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றார். செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டார அட்மா திட்ட மேலாளர் சிவரஞ்சனி, உதவி மேலாளர்கள் ரஞ்சனி, பிரியா ஆகியோர் செய்திருந்தனர். பட விளக்கம்: பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடு பொருட்கள் வழங்கப் பட்டன.