தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் வ.உ.சியின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.