Skip to content
Home » திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

  • by Authour

சட்டம் மேதை அம்பேத்கர் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விடுதலை கட்சியின் சார்பில் எழுச்சித்தமிழர் திருமாவளவன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் “சனநாயகம் காப்போம்” என வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் அருள், நீலவானன், முத்தழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் இளமாறன், மற்றும் இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு பாரதியார் சாலை, வழியாக, ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, ரயில் ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம் வழியாக அரிஸ்டோர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டம் மேதை அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பெரும்பான்மை மதவாத மதவெறியை எதிர்ப்போம், சனாதான கார்ப்பரேட் மேலாதிக்கத்தை ஒழிப்போம், பண வீழ்ச்சியை தடுப்போம், அரசமைப்பு சட்டவிரோத பாசிச போக்கை தடுத்து நிறுத்துவோம், விலைவாசி உயர்வை

கட்டுப்படுத்துவோம், பங்கு சந்தை கூட்டுக் கொள்ளைகளை தடுத்து நிறுத்துவோம் உள்ளிட்ட உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்தப் பேரணியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி அரசு, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், துணை சரவணன்,
மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, தொகுதி செயலாளர்கள் கனியமுதன், பொன். முருகேசன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் ஆல்பட்ராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *