Skip to content

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின் கொடி கம்பத்தை வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து தனியார் திருமணக்கூடத்தில் தங்க வைத்தனர்.

error: Content is protected !!