பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்
வழக்கறிஞர் சா. விவேகானந்தன் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு குற்றவாளியை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் கைது வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல செயலாளர் இரா.கிட்டு ,மன்னர் மன்னன் ,வழக்கறிஞர் ஸ்டாலின், உதயகுமார், வழக்கறிஞர் ரத்தினவேல் ,ஒன்றிய செயலாளர் ராணிவரதராஜன் ,இடி முழக்கம், வெற்றியழகன் சீனிவாசராவ், கோகுல் ,அழகுமுத்து,
உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.