திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக-விற்கு எதிரான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் .இந்த மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸிட்-லெனினிஸ்ட் கட்சியின் திப்பாங்கர் பட்டாச்சார்யா, மாநில கட்சியின் தலைவர்களான வைகோ, காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் பரப்புரை பணிகளை தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்திய கூட்டணியின் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னெடுத்துள்ளார்.