விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும், திருமாவளவனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் கடந்த தேர்தலைப்போல திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. இருவரும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் இனி காங்கிரஸ் கட்சி மட்டும் ஒப்பந்தத்திற்கு வர வேண்டியது உள்ளது.
