தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின் கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது.
அத்துடன் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில்லை, அதற்கு பல வியாக்யானங்கள் செய்கிறார். நான் பெண்டிங் வச்சா அது ரிஜெக்ட் என்று அர்த்தம் என கூறுவதாகவும், பட்டமளிப்பு விழாக்கள் நடத்த காலதாமதம் செய்வதாகவும், கவர்னர் ரவி மீது அரசு புகார் கூறுகிறது.
தற்போது கவர்னர் ரவி சர்ச்சையின் புதிய தகவல் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை பாரதியார், மற்றும் கல்விவியல் பல்கலை ஆகிய 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளது. 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென கவர்னர் நிபந்தனை விதித்து வருகிறார். இதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்து ரவிக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும்,யுஜிசி உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்றும் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.