வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த ஸ்ருதி என்ற இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்தது பெருந்துயரம் ஏற்படுத்தியுள்ளது. இதே விபத்தில் ஸ்ருதி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்காலம் முதல் நண்பர்களான ஜென்சன் – ஸ்ருதி, வரும் டிசம்பரில் திருமணம் செய்ய இருந்தனர். ஆனால், குடும்பம், வீடு, நகை, பணம் என சகலத்தையும் நிலச்சரிவு பறித்துச் செல்ல, பரிதவித்து நின்ற ஸ்ருதிக்கு ஆறுதலாக இருந்துள்ளார் ஜென்சன். கல்பெட்டா அருகே கடந்த 10ம் தேதி ஜென்சன் ஓட்டிச் சென்ற ஆம்னி வேன், எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜென்சன், ஸ்ருதி மற்றும் காரில் இருந்த 7 பேர் படுகாயமடைய, வென்டிலேட்டர் பொறுத்தப்பட்ட ஜென்சன் நேற்று மரணமடைந்தார். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு… குடும்பத்தினரை இழந்த இளம்பெண்… ஆறுதலாக இருந்த காதலனும் விபத்தில் பலி…
- by Authour
