எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? பேரிடர் ஏற்படும் எனத்தெரிந்து 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தோம். தயவு செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும்.
எங்கள் பேச்சைக் கேளுங்கள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம். மழை, வெள்ளம், புயல், வெப்ப அலை என அனைத்துக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு புயல் எச்சரிக்கை கொடுத்தோம். அங்கு சிறு உயிரிழப்புகூட ஏற்படவில்லை. இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது. எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.