கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு இடைப்பட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த போது இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஜூர்சன் வால்பாறையில் சுற்றிப் பார்த்துவிட்டு பொள்ளாச்சி செல்வதற்காக டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் செல்லும் போது அங்கு ஒற்றைக்காட்டு யானை நிற்பதாக எச்சரிக்கை செய்தும் எச்சரிக்கையை மீறி மைக்கேல் ஜூர்சன் சாலையைக் கடக்க முயன்றதால் யானை அவரை தாக்கிய காட்சி பத பதைக்க வைத்தது இதில் கால் மற்றும் கைகளில் வெளிப்புற காயங்கள் ஏற்பட்டன.
மேலும் யானை தூக்கி வீசியதில் அவருடைய இருசக்கர வாகனத்தை தூக்கி வீசியது. உடனடியாக வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ கவனிப்பு இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வரும் வாகனங்களை வழிமறித்தும் வருகிறது வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் வெளிநாட்டுப் பயணி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.