பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.தருமபுரம் ஆதீன பராமரிப்பில் இருக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ எடை கொண்டதும் ரூ.3கோடி செலவில் வெள்ளி ரதம் உருவாக்கப்பட்டது.
வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமிர்தகடேஸ்வரர் சந்நிதி முன்பாக
நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி ரத கும்பத்திற்கு சிவாச்சியார்கள் புனித நீர் ஊற்றி ஆராதனை செய்தனர்.
அதன் பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளி ரதத்தை வடம்பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். தருமபுர ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், என 4 ஆதீனங்கள் முன்னிலையில் நடைபெற்றது. வெள்ளிரதமானது அமிர்தகடேஸ்வரர் சன்னதியின் நான்கு பிரகாரங்களையும் சுற்றி நிலை வந்தடைந்தது.
ரூ.3 கோடி செலவில் புதிதாக உருவான வெள்ளிரத வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், அமிர்த விஜயகுமார் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.