பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது. 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க அதிமுக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இதுவைர அந்த கூட்டணிக்கு பிரதான கட்சிகள் யாரும் வரவில்லை.
இந்த நிலையில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அதிமுகவை எப்படியும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இது தொடர்பாக ஏற்கனவே அவர் எடப்பாடியை சந்தித்து பேசினார். பாஜக கூட்டணிக்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்து விட்டார்.
அதன்பிறகும் அதிமுகவுக்காக பாஜக கதவு திறந்தே இருக்கிறது என அமித்ஷா பேட்டி அளித்தார். கடந்த திங்கட்கிழமை தமாகா செயற்குழு கூட்டம் நடந்தது இதில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து வாசன் துண்டு சீட்டு முதல் கருத்து அறிந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணி பற்றி கொஞ்சம் யோசியுங்க, பாஜக பக்கம் இந்த ஒரு முறை வாங்க…. மற்றதை பின்னர் பேசிக்கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது. அதற்கு எடப்பாடி இனி பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை என தெளிவாக கூறி விட்டாராம்.
இந்த நிலையில் வாசன் பாஜக தூதராக எடப்பாடியை சந்தித்ததாக செய்திகள் வெளியானது. அதற்கு பதில் அளித்த வாசன், நான் பாஜக தூதராக சந்திக்கவில்லை. மரியாதை நிமித்தமாக எடப்பாடியை சந்தித்து பேசினேன் என்று கூறி உள்ளார்.