Skip to content

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் திருச்சி எஸ்பியுமான வருண்குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், சைபர் கிரைம் துறையில் தற்போதுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, 22 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று, அவரை உரையாற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு வருண்குமார் ஐபிஎஸ் பேசியதாவது..
தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், உலகில் எங்கிருந்தும், இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம். குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, என்னையும் ஐ.பி.எஸ்., அதிகாரியான என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி, உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் எனக்கு ஆதரவு அளித்தது. ஆனால், ஆபாசமான பதிகளை யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி எஸ்பியின் இந்தபேச்சு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் தொடர்பான விவகாரத்தில் சுமார் 8 மாதகாலமாக துணிந்துபோராடி வரும் எஸ்பி வருண்குமார் நேற்று அகில இந்திய அளவில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் சைபர் க்ரைம் விஷயத்தில் தானும் தனது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டது தொடர்பாக தைரியமாக பேசியிருப்பது அகில இந்த அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகளம் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. திருச்சி எஸ்.பி. வருண்குமார், அவரது மனைவியான புதுகை எஸ்.பி வந்திதா பாண்டே, மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கொலை மிரட்டல், ஆபாச பதிவுகளை நாதகவினர் பதிவு செய்தனர். இது தொடர்பாக புகாரின்பேரில், திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!