திருச்சி டிஐஜி வருண்குமாரை தரக்குறைவாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி ஜே எம். 4 கோர்ட்டில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக டிஐஜியும், சீமானும் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்கள்.
இந்த வழக்கு விசாரணைக்காக பிப்ரவரி 19ல் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை நீதிபதி கூறியிருந்தார்.
ஆனால், சீமான் அந்த நோட்டீசை பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், இன்று நீதிமன்றத்திலும் ஆஜராகாத நிலையில் விசாரணைக்காக திருச்சி சரக டிஐஜி வருண் குமார் நீதிபதி முன் ஆஜரானார். சீமான் ஆஜராகாததால், இந்த வழக்கு ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சீமான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், சீமான் இன்று ஆஜராக முடியாத நிலை உள்ளதால் இன்னொரு தேதிக்கு வழக்கை தள்ளிவைக்கும்படி கேட்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்கவில்லை.
மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பித்து விடுவேன் என நீதிபதி கடுமையாக கூறினார். மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.