கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் நேற்று க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 30 என்பவர் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று நபர்கள் வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1250 கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து வினோத் குமார் க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் உதவி ஆய்வாளர் அழகுராமு ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் தென்னிலை, வைரமடை சோதனை சாவடியில் நேற்று வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த AP 39 GX 3903 ETIOS என்ற பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் காரில் இருந்த ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த 1) மனுபடி சாய் தேஜா (25) ,2) கம்மா சங்கரம்மா(27), 3) பாலாஜி
(19) ஆகியோர்களை விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த மாதம் க.பரமத்தி பகுதிகளில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது ஆந்திர மாநிலத்தில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக கார் மூலம் சுற்றித் திரிந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்து நபர்களிடமிருந்து கார், பணம் ரூ.1250/- மற்றும் கத்தியை கைப்பற்றி பின்னர் அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு திருச்சி பெண்கள் சிறை மற்றும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.