Skip to content

பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்…  நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், புதிய தொழில்நுட்பங்கள், சிறு குறு விவசாயிகள் நலன்,  மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,  டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது. மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!