திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரத்தில் ரூபாய் 41.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 03.11.2023 குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார் , துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன்,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ் குமார் உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி கங்கா தாரணி, ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன், அசோகன் அண்ணாதுரை வீரபத்திரன்
உப்பிலியபுரம் பேரூர் கழக செயலாளர் நடராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி திருநாவலூர் சுப்பிரமணி, கொப்பம்பட்டி மனோகரன், கோட்டப்பாளையம் ராஜா என்கிற மரியதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி மன்ற தலைவர் லதா தனபால் அனைவரும் வரவேற்றார். ஊராட்சி செயலர் விஜய் நன்றி உரை கூறினார்