திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் சரவணனை நேரில் சந்தித்த நத்தமாங்குடி பகுதியைச் சேர்ந்த எழிலழகன் வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு பெறுவதற்காக சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது விஏஓ கலைஞரின் அனைத்து மகளிர் உதவி திட்டத்தில் பணியில் இருந்ததால் 10 நாட்களுக்குப் பிறகு வருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நத்த மாங்குடிக்கு விஏஓ செல்லாத நிலையில் கல்விக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் எழிலகன் சான்றிதழ் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ சரவணன் இன்னும் 2-3 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எழிலகன் விஏஓ சரவணனை தாக்கி உள்ளார்.இதை தடுக்கச் சென்ற அவரது உதவியாளர் கோகிலாவையும் தாக்கியுள்ளார். இதில் காயம் பட்ட இருவரும் லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாக்குதல் நடத்திய வாலிபர் எழிலழகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் தாக்குதல் நடத்திய எழிலகனை வலைவீசி தேடி வருகின்றனர்.