தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி பணியில் இருந்த அவரை அலுவலகத்தில் புகுந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டாசில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:VAO Kundas