கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி ஒன்று பைபாஸ் சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதை அந்தபகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த ரெங்கநாதபுரம் விஏஒ ஸ்டாலின் பிரபு தன்னுடைய பைக்கில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் விரட்டி சேஸ் செய்து லாரியை மடக்கியுள்ளார். டிரைவர் லாரியை சாலையிலியே நிறுத்தி வி்ட்டு தப்பி ஒடிவிட்டார்.
பின்னர் தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை செய்து லாரியை மாயனூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ரெங்கநாதபுரம் விஏஒ ஸ்டாலின் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் லாரியை விஏஓ இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.