Skip to content
Home » புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்ய முடியும் என கூறி விட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத  சிவக்குமார் இது குறித்து  லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.  போலீசாரின் ஆலோசனைப்படி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்திற்கு   விஏஓவை வரவழைத்து அங்கு  சிவக்குமார்  லஞ்சம்  கொடுத்தார். அதை விஏஓ பெற்றபோது  இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!