பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50 நிமிடங்களில் திருச்சியை வந்தடையும். பயண நேரத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வருவதற்கு 3 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்ல 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். இதேபோல் திருச்சியில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு 3 மணி நேரம் 55 நிமிடங்களும், நெல்லையில் இருந்து திருச்சிக்கு வருவதற்குக்கு 3 மணி நேரம் 50 நிமிடங்களும் ஆகும்.
கட்டணத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.830 உம், உணவோடு சேர்த்து ரூ.1070வும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1685 ரூபாயும், உணவோடு சேர்த்து 1895 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.830-ம், உணவோடு சேர்த்து ரூ.895-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1635 ரூபாயும், உணவோடு சேர்த்து 1740 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து நெல்லை வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.800-ம், உணவோடு சேர்த்து ரூ.1020-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1575 ரூபாயும், உணவோடு சேர்த்து 1820 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை – திருச்சி: இதேபோல் நெல்லையில் இருந்து திருச்சி வருவதற்கு சாதாரண ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் ரூ.800-ம், உணவோடு சேர்த்து ரூ.920-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வகுப்பு ஏசி சேர் கார் பெட்டியில் உணவு இல்லாமல் 1575 ரூபாயும், உணவோடு சேர்த்து 1730 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்போன், இணையதளம் மூலமாக டிக்கெட் எடுக்கும் போது கூடுதலாக ரூ.20 அல்லது 30 ரூபாய் வசூலிக்கப்படும்.