பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் இதுவரை வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 36 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 365 காளைகள் களம் கண்டுள்ளன. தொடர்ந்து இன்னும் சில சுற்றுகள் போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்
- by Authour
