அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் வண்ணக் கோலங்களையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை பார்வையிட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா மகளிர் குழுவினர் தங்கள் இல்லங்களிலும் இது போன்ற கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு கோல ஓவியம் நடைபெற்றது. அரியலூர் நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 10க்கு மேட்டர் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ண கோலங்களை வரைந்தனர். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய
வண்ணக் கோலங்களை மகளிர் செய்து குழுவினர் வரைந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணி மேரி ஸ்வர்ணா இக்கோலங்களை பார்வையிட்டார். சிறப்பாக வரைந்திருந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேர்தல் முடியும் வரை மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது இல்லங்களிலும் இதுபோன்று கோலங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் ஒன்றாக சேர்ந்து தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகை ஏந்தி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் கங்காதரனி, மகளிர் திட்ட அலுவலர் லட்சுமணன், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், அரியலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.