வாணியம்பாடி அருகே நிஷா மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை உரிமையாளரிடம் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் தனியார் மருத்துவமனையான நிஷா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் மாணவிகளிடம் மருத்துவமனை உரிமையாளர் ஜாவித் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் அம்பலூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் ஆனந்தன் என்பவரிடம் மாணவிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அம்பலூர் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை உரிமையாளர் ஜாவித் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.