பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக பிரதீபின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதை பார்த்து பலரும் பிரதீப்பை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். ஆனால், சிலர் வனிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள். பின்னர் இந்த விவகாரம் குறித்து பிரதீப், வனிதாவிடம் எனக்கு இதில் சமந்தம் இல்லை என்று மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘’அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்-க்கும் விஜய் டிவிக்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா?.
I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது… It’s only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you’’ என பதிவிட்டுள்ளார்.