தன்னைத் தாக்கியவர் பிரதீப் ஆதரவாளாராக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. போலீசில் புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. தன்னை தாக்கிவிட்டு பைத்தியகாரன் போல் சிரித்ததாக விளக்கம் அளித்துள்ளார். தாக்கப்பட்ட முகத்தின் போட்டோவை சமூக வலைதளத்தில் வனிதா பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் 7னில் பிரதீப் ஆண்டனியை பெண் போட்டியாளர்கள் ரெட்கார்டு கொடுத்து வௌியேற்றினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்தனர். பிரதீபுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதற்கு பல்வெற தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டுமொத்த இணையத்தளமும் பிரதீப்பை பற்றி தான் பேசியது. பிரதீப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மகள் ஜோவிகாவுக்கு அதரவாக வனிதா யூடியூப் சேனலில் பேசி வருகிறார். பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பியது சரிதான எனக்கருத்து தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தான் தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக வனிதா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் பிரதீப் கோவா திரைப்பட நிகழ்ச்சியில் தனது தோழியுடன் பங்கேற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.