ராஜகிரி, பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலர் செல்வம் வரவேற்றார். இதில் தலைவராக அண்ணா துரை, செயலராக செல்வம், பொருளாளராக சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகினர். கூட்டத்தில் அப்துல் அஜீஸ், அமானுல்லா, முஜிபுர் ரஹ்மான், ராமநாதன், பன்னீர், அப்துல் ஹமீது, முகமது அமீர், அப்துல் காதர், அஜீஸ், தாகிரா பேகம், முத்தமிழ்ச் செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையை அகலப் படுத்தி தரமான முறையில் போட வேண்டும். ராஜகிரியில் உள்ள தேவரடியார் குளத்திற்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்துவது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின. பொருளாளர் சிக்கந்த ர் நன்றி கூறினார்