அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் வண்டி கடைகளில் பெரும்பாலும் அசைவ உணவுகள் விற்கப்பட்டு வருகிறது. வண்டிகளை சுற்றி சாமினா பந்தல் போட்டுள்ளதா ல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இன்று நகராட்சி
ஆணையர் வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது கடைகளில் வைக்கப்பட்டிருந்த கடலை உள்ளிட்ட சில பொருட்கள் தவறி கீழே விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிறு வியாபாரிகளை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட பொழுது, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள வண்டிக்கடை சிறு வியாபாரிகளிடம், நடமாடும் வண்டி கடை அமைக்க மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சாமினா பந்தல் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்று பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இக்கடை வியாபாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்ததால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடும் நிலவுவதாக புகார்கள் வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி அக்கடைகளை அகற்ற இன்று நடவடிக்கை எடுத்தோம். நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில் கடைகளை போடுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறினார்.