Skip to content
Home » தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது..ஆண்டில் ஒரு சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும் விவசாய பயிர்களை உண்பதும் வாடிக்கையாகி விட்டது..இதன் பிரமாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படும் இந்த யானையை மூன்று கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முயன்றும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன..ஆண்டுக்கணக்கில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வந்தாலும் இதுவரை இந்த யானை யாரையும் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூட செய்யாமல் தான் வந்த வேலையான வாழை, பாக்கு

உள்ளிட்ட விவசாய பயிர்களை உண்டு விட்டு சென்று விடும்.. தன்னை துன்புறுத்தி விரட்ட முயல்பவர்களை கூட பாகுபலி யானை தாக்க முற்படாமல் கடந்து செல்வது இதன் இயல்பு..ஆனால் இதனை பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் பாகுபலி மீது அண்மைகாலமாக தாறுமாறாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வன உயிரின ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது..ஏற்கனவே பாகுபலி மீது ஏராளமான ராக்கெட் வெடிகள் கண்மூடித்தனமாக வீசப்பட்டு வந்த நிலையில் தற்போது கனமான பிளாஸ்டிக் குழாய்களால் துப்பாக்கி போல் உள்ள ஆயுதத்தை யானையை விரட்ட சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.. உள்பக்கம் ஸ்பிரிங் வைக்கப்பட்ட இந்த குழாயினுள் பெரிய கற்களை போட்டு யானையை நோக்கி இழுத்து விடுகின்றனர்..இதில் இருந்து வேகமாக வெளியேறும் கற்கள் யானையை பலமாக தாக்கி காயப்படுத்தி வருகின்றன..இவையனைத்தும் வனத்துறையினர் கண் முன்னே யானை விரட்டும் பணியில் அவர்களுக்கு உதவுவதாக கூறி வனத்துறையினருடன் உடன் செல்லும் சிலரே இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறும் வன உயிரின ஆர்வலர்கள் இது போன்ற இரக்கமற்ற செயல்கள் மனிதர்களை தாக்காத குணமுடைய யானையின் இயல்பை மாற்றி அதனை மூர்க்கத்தனமானதாக மாற்றி விடும் என எச்சரிக்கின்றனர்..உடனடியாக இது போன்ற யானைக்கு எதிரான செயல்களை வனத்துறையினர் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்..

இதுகுறித்து வனத்துறையினர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்த ஜெகநாதன்(45) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *