Skip to content

சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 08 வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் சோதனைச் சாவடியில் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்லக்கூடாது என வனத்துறை தடை செய்து கடந்த ஒரு வார காலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி வைத்திருப்போர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் DFO. பார்க்கவி தேவ் துணை இயக்குனர் ACF செல்வம். வனச்சரகர்கள் வெங்கடேஷ். மணிகண்டன். முன்னிலையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் ஜேசுதாஸ் மற்றும் தங்கும் விடுதி டூரிஸ்ட் கார்டு ஓட்டுநர் உள்ளிட்டோர் முன்னிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்ததை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் வால்பாறை பொதுமக்களின் சார்பாகவும் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மறு வரையறை செய்ய வேண்டும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். வால்பாறை பொள்ளாச்சி மற்றும் பிற எஸ்டேட் சாலைகளில் புலிகள் காப்பக தடையை விடுவிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்னிறுத்தினர். இதற்கு பதில் அளித்த ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக இணை இயக்குனர் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் மது அருந்துவது அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாடுகளை துன்புறுத்துவது சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை சுற்றுலாப் பயணிகள் நிகழ்த்தி காட்டுவதால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 6 மணிக்குள்வால்பாறைக்கு சென்று விட வேண்டும் என வனத்துறை மட்டும் அல்லாமல் அரசாங்கம் எங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாகவே வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் தற்போது சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் கூறியதை ஏற்ற வனத்துறை மீண்டும் இரண்டு மணி நேரம் அதிகப்படுத்த வேண்டும் என கூறியதன் பேரில் அதற்கு வனத்துறை சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை பின்படுத்த வேண்டும் எனவும் வணிகர் சங்க சார்பாக எம்எல்ஏ முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட வனத்துறை உயர் அதிகாரி இந்த மனு மீது பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார் இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வனத்துறை இணை இயக்குனர் பார்கவிதேவ் துணை இயக்குனர் செல்வம் வால்பாறை மாணாம்பள்ளி வனச்சரகர்கள் வெங்கடேஷ் மணிகண்டன் நகரச் செயலாளர் மயில் கணேசன் சுடர் பாலு சண்முகவேல் ஐடி சண்முகம் சசிகுமார் எஸ்.கே.எஸ். பாலு. எம். ஆர்
.எஸ். மோகன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!