Skip to content

வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

  • by Authour

இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். வி ஹவுஸ்  புரோடக்‌ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஒரு கையில் பெரியாரும் மற்றொரு கையில் விநாயகருடனும்  அருண் விஜய்  இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த போஸ்டர் குறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம், இயக்குனர் அண்ணன் பாலா அவர்கள். அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இன்று வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம். இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் காட்சியால், இந்த படத்தின் மீது  தமிழகத்தில் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!