டக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்கிற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்றைய தினம் வேன் இன்ரும், ட்ரெய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. வாகனங்கள் அதிவேகமாக மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் வேனில் சிக்கியிருந்த குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். வேன் கொழுந்துவிட்டு எரிந்தததால் 26 பேர் வேனுக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
அதேபோல் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் வேனில் இருந்தவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போனது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அத்துடன் இந்த கோர விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.