திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடினர். பின்னர் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது டிரைவர் கண் அயர்ந்து விட்டதாக தெரிகிறது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஒரு மரத்தில் மோதியது. இதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த 14 பேர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.