தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சையில் இருந்து jதினத்தந்தி பேப்பர் ஏற்றுவதற்காக சென்ற வேன் பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. இதில் 17 பக்தர்கள் காயம் அடைந்தனர். உடன் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.