Skip to content

மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்  வரும் 4ம்  தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட, சிவபெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை போர்த்தி கொண்டு வீரச்செயல் நிகழ்த்திய தலம் வழுவூர்.

அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான இக்கோயிலில் சிவபெருமான் கஜ சம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார்.
இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள்  தொடங்கிய நிலையில், முதல்கால யாகசாலை பூஜை இன்று மாலை நடைபெற உள்ளது.

யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்கான புனிதநீர் கோயில் முகப்பு பகுதியில் இருந்து மூன்று யானைகளின் மீது ஏற்றப்பட்டு வீதி உலா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் யானை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் கோயில் யானை மற்றும் தருமபுரம் கோயில் யானை ஆகிய மூன்று யானைகள் இதில் பங்கேற்றன.

கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது தொடர்ந்து சிவ வாத்தியம், மேளதாள வாத்தியங்கள் முழங்க பசு குதிரை ஆகியன முன் செல்ல அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும்  மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் யானைகள் பின் செல்ல, கும்பாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்பட உள்ள மங்களப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியனவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது பிறகு சிவசாரியார்கள்  பூஜை செய்தனர் .

error: Content is protected !!