தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களின் உத்தரவுப்படி, வெளிமண்டல வனசரகங்களில் (சீகூர், சிங்காரா & நீலகிரி கிழக்கு சரகம்) பருவ மழைக்கு முந்தைய (பாகம் -I, தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு) கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. 15.05.2024 வரை இந்த பணி நடைபெறும்.
இதில் மொத்தமுள்ள 34 நேர்கோடுகளில், நேர்கோட்டில் குளம்பினங்களை கணக்கெடுத்தல், மாமிச உண்ணிகளின் அடையாள அளவை காணல், தாவரங்கள் கணக்கெடுத்தல், மனித இடையூறுகள் கணக்கெடுத்தல் மற்றும் புழுக்கைகள் கணக்கெடுப்பு போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கணக்கெடுப்பிற்கான பயிற்சி தெப்பகாடு பாகம் IV கண்காணிப்பு மையத்தில் நடைபெற்றது. பயிற்சி முடிந்ததும்
தொடந்து கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது
இந்த கணக்கெடுப்பில் 170 வனப்பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.