கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் மாணாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கெஜமுடி. தோணிமுடி. தாயமுடி சோலையார். உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் குட்டிகளுடன் புதிய வரவாக முகாமிட்டுள்ளது. இருப்பினும் பட்டப் பகலில் பேருந்துகள் சுற்றுலாப் பயணிகள் செல்லும் பிரதான சாலையில் தடுப்புச் சுவரிலிருந்து கீழே இறங்கி குடியிருப்பு மற்றும் பயணிகள் நிழற்குடையின் எதிரே குடியிருப்புகள் இருந்தும் வாங்க? பழகலாம? என 2 ஆண்யானைகள் உலா வருகிறது.
இந்த யானைகள் கடந்த ஒரு வருட காலமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்டுகளிலும் சுற்றி உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இந்த இரட்டையர்கள் எப்போதும் பிரிவது கிடையாது .மற்ற கூட்டங்களுடன் இது சேர்வதும் கிடையாது. இதனால் வியக்கத்தக்கும் வகையில் பகல் நேரங்களில் குடியிருப்புகள் என்று பாராமலும் மனம் போன போக்கிலே உலா வருவதால் ஒட்டுமொத்த பொதுமக்கள் அச்சத்தில் குடியிருந்து வருகின்றனர்.
மேலும் வால்பாறை பகுதியில் புதிய வரவாக யானைகள் வரவு அதிக அளவில் இருப்பதால் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.