கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி மருத்துவமனை அருகாமையில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து வைரலாகிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஐயர் பாடி மருத்துவமனை பகுதியில் யானை கரடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் உலா வருகிறது. தற்போது நேற்று இரவு அவ்வழியே வந்த சுற்றுலாப் பயணிகள் கரடி ஒன்று அப்பகுதியில் இருப்பதைக் கண்டு படம் பிடித்துள்ளார்கள் எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் கரடியில் அடிக்கடி உலா வருவதால் வழியே செல்லும் மக்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது
