கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால் அரசு பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்களுக்கு பயன்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பேருந்துகள் மிகவும் பழுது அடையும் சூழ்நிலைகளில் அரசு
பேருந்து இயக்கப்படுகிறது. வால்பாறை அருகில் உள்ள வில்லோனி டாப் எஸ்டேட்டில் இருந்து வால்பாறைக்கு சென்ற பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றது. குறுகிய சாலை வளைவாக இருந்ததால் பேருந்தை அகற்றும் பணியில் அப்ப பேருந்தில் பயணித்த பயணிகள் உதவியுடன் டிராக்டர் மூலம் கயிறு கட்டி பேருந்து மீட்கப்பட்டது,மழைக் காலங்களில் பேருந்து குள் மழைநீர் வடியும் ஆகவே வால்பாறை மக்களை நலன் கருதி தமிழக அரசு புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு பெண்களுக்கான இலவச பேருந்து தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது