கோவை மாவட்டம், வால்பாறைக்கு காட்டு யானைகளின் இனப்பெருக்க காலமாக இருப்பதால் ஏராளமான காட்டு யானைகள் கேரள வனப்பதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு வந்த வண்ணமாக உள்ளன. இடப்பெயற்சி காரணமாக கேரள பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை த்தோட்ட பகுதிகளில் உலா வருகின்றன .இந்நிலையில் 4 காட்டு யானைகள் அடங்கிய ஒரு கூட்டம் சிறுகுன்றா தேயிலைத்தோட்டத்தில் கூழாங்கல் ஆற்றுக்கு மிக அருகில் முகாமிட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை மாற்றிடத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் மருந்து அடித்தல் மற்றும் கொழுந்து பறிக்கும் பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . மேலும் கூழாங்கல் ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.