கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி வால்பாறையில் அதிமுகவின் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன்,தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு,நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து முன்னால் அமைச்சரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணி பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்தி கேயனை திறந்த வெளி வாகனத்தின் மூலம் அறிமுகம் செய்து நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதைத்தொடர்ந்து வால்பாறை துளசியம்மாள் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது அப்போது முன்னால் அமைச்சர் எஸ்.பிவேலுமணி பேசும்போது மாநில அரசுக்கு தேவையான அனைத்தையும் உரிமைகளையும் பெற அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்ய வேண்டும் அதேபோல பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு வழங்கிவந்த தாலிக்கு தங்கம் முதல் அனைத்து நலத் திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது, எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு அமைந்தவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனவே அதிமுக தலைமையிலான நல்லாட்சி அமையும் வரை அனைவரும் அயராமல் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்
கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…
- by Authour
