கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 14 வால்பாறையை அடுத்த சின்கோனா மலைவாழ் மக்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பேடி சார் ஆட்சியர் பிரியங்கா. மற்றும் தளபதி முருகேசன் நகரச் செயலாளர் சுதாகரன் நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி செல்வம் துணை தலைவர் தா மா செந்தில்குமார். உள்ளாட்சித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு இணை துணை அதிகாரிகள் சின்கோனா சோதனைச் சாவடியில் இருந்து அதிகாலை ஐந்து மணியில் நடைபயணமாக சென்று ரயான் டிவிசன் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை கொட்டும் மழையில்11 கீ.மீ நடைபயணமாக சென்று பார்வையிட்டார் மேலும் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதாகவும் சிறுநீரகம் பாதுகாப்பு என்ற புதிய திட்டத்தில் 30 வயது உள்ளவர்கள் செயல்பாட்டு திறன்
பற்றி விழிப்புணர்வும் தமிழக முதல்வர் துவக்கி வைத்த அப்பகுதியில் உள்ள மக்களை தேடி மருத்துவம் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ பெட்டகம் நலத்திட்ட உதவிகளில் பெட் சீட் துணிமணிகள் உள்ளிட்டவைகளை அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள சிறு குழந்தைகளை தொடக்கப் பள்ளிகளிலும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக பணி மேற்கொண்டதற்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். நிகழ்வில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர் மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் காலை சிற்றின்படி வழங்குவதையும் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது