கோவை மாவட்டம் வால்பாறை சுற்று பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் மளிகை கடை சத்துணவு மையம் போன்றவைகளை இடித்து சாப்பிட்டு சேதப்படுத்தி வருகின்றன., இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள கருமலை தேயிலைத் தோட்டப் பகுதிக்கு நேற்று இரவு வந்த இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு அருகே உள்ள மாடசாமி கோவில் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியது. அதேபோல் அக்காமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.