கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன விலங்கான சிறுத்தை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது..
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர் , துளசிங்க நகர் , கூட்டுறவு காலனி கக்கன் காலனி , அண்ணா நகர். வால்பாறை டவுன் பகுதி போன்ற குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் நாய் ஆடு கோழி பூனை.கன்று
குட்டி உள்ளிட்ட உள்ளிட்ட வீட்டு விலங்குகளை வேட்டையாட குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது
இதே போல் இன்று அதிகாலையில் கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் மூன்று சிறுத்தைகள் நடந்து செல்லும் வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது..
இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் மேலும் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்..
எனவே மக்களை அச்சுறுத்தி மனிதர்களை தாக்குவதற்கு முன்பே குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..