கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்களில் ஐந்து பேர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து மற்றவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்து ஐந்து பேர்களும் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் ஐந்து பேர்களும் சுடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும் 1.சரத்
2.அஜய்
3.ரபேல்
4.தனுஷ்
5.வினித் என்பதும் தெரியவந்தது. சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.